Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘ஆடிஷனிலிருந்து அழுதபடி வீடு திரும்பினேன்’ கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சமீரா ரெட்டி

சென்னை: மகேஷ் பாபு படத்தின் ஆடிசனுக்காக சென்றுவிட்டு அழுதுகொண்டே திரும்பியதாக பிரபல நடிகை பகிர்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழில் சூர்யா, அஜித் உள்ளிட்டோருடன் நடித்த பிரபல நடிகை சமீரா ரெட்டி. இந்தி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அஜித்துக்கு ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்த அவர், விஷாலுக்கு ஜோடியாக ‘வெடி’ படத்திலும் நடித்தார்.

தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை அண்மையில் பேட்டி ஒன்றில் சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார். அதில், ‘‘அது எனது முதல் பட ஆடிஷன். அப்போது மகேஷ் பாபு படத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றேன். அன்று மிகவும் பயமாக இருந்தது. அதனால் சரியாக நடிக்க முடியவில்லை. அழுதுகொண்டே வீடு திரும்பிவிட்டேன். அதன்பின் தைரியத்தை வரவழைத்து ஒரு ஆல்பத்தில் நடித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை, தாவணியில் இருக்கும் படங்களைப் பகிர்ந்த சமீரா ரெட்டி, இது மகேஷ் பாபு படத்தின் ஆடிசனுக்காக எடுக்கப்பட்ட படம். அந்த படத்தை தவறவிட்டேன் என தெரிவித்துள்ளார்.