ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் நேற்று வரை 345 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் மலைவாழ் மக்களின் தலைவனாக சிறப்பாக நடித்திருந்த சம்பத் ராம் கூறுகையில், ‘எனது வித்தியாசமான தோற்றம் மிரட்டலாக இருந்தது. முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், முகத்தில் முதுமைக்கான மேக்கப் அணிந்து நடித்தேன். மேக்கப் போட ஒன்றரை மணி நேரம், கலைக்க ஒரு மணி நேரமாகும். வாய்ப்பளித்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. கன்னடத்தில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிய ‘சயனைடு’, ‘அட்டஹாசா’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தேன். இப்படங்கள் தமிழில் ‘குப்பி’, ‘வனயுத்தம்’ ஆகிய பெயர்களில் வெளியானது. ‘அட்டஹாசா’ படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி அசிஸ்டெண்டாக பணியாற்றினார். அப்போது அவருக்கும், எனக்கும் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் இயக்கிய ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றியால் என்னை தேடி நிறைய புதுப்பட வாய்ப்புகள் வருகிறது. கருப்பு மேக்கப்பில் என் நடிப்பை பார்த்து வியந்த ரிஷப் ஷெட்டி, என்னை மனதார பாராட்டினார். அது எனக்கு உற்சாகத்தை அளித்தது’ என்றார்.
+