Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் பாலய்யா ஜோடியாக சம்யுக்தா

தெலுங்கு படவுலகில் ‘பாலய்யா’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் பான் இந்தியா படம், ‘அகண்டா 2: தாண்டவம்’. நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் 4வது முறையாக இயக்குனர் போயபதி னு இணைந்துள்ளார். ‘அகண்டா’ படத்தின் தொடர்ச்சியாக ‘அகண்டா 2: தாண்டவம்’ என்ற பெயரில், ஆன்மீக பின்னணியுடன் உருவாகும் இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்துக்காக ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா தயாரிக்கின்றனர். எம்.தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார். தற்போது ஜார்ஜியா நாட்டில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நவராத்திரி திருவிழா விடுமுறையையொட்டி, வரும் செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகிறது. வில்லனாக ஆதி பினிஷெட்டி நடிக்கிறார். ‘அகண்டா’ படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்த சம்யுக்தா மேனன், 2வது பாகத்திலும் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். சி.ராம் பிரசாத், சந்தோஷ் டி டெடகே ஒளிப்பதிவு செய்கின்றனர். ஏ.எஸ்.பிரகாஷ் அரங்கம் அமைக்க, தம்மிராஜூ எடிட்டிங் செய்கிறார்.