Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மோகன்லால் படத்தில் அறிமுகமாகும் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதேசமயம் மலையாள நடிகர். கன்னட இயக்குனர். ஹிந்தி தயாரிப்பாளர் என்றாலும் கூட இந்த படம் தெலுங்கில் தான் தயாராக இருக்கிறது இந்த படத்திற்கு விருஷபா என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், தான் இயக்க உள்ள படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் மோகன்லால் படம் மூலம் ஷனாயா கபூர் அறிமுகமாக இருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கரண் ஜோஹர், மோகன்லால் படத்தில் இணைந்து நடிப்பதன் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.