Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேடி: தி டெவில் பட விழா சென்னையில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி

சென்னை: கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா தயாரிக்க, பிரேம் இயக்கத்தில் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி, வி.ரவிச்சந்திரன், ரீஸ்மா நானய்யா நடித்துள்ள மிகப் பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது சஞ்சய் தத் பேசுகையில், ‘மீண்டும் நான் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தேன். ரஜினி சாருடன் பல இந்தி படங்களில் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் எனக்கு பிடிக்கும். ‘கேடி’ படத்தில் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை அதிக அன்புடன் கவனித்துக்கொண்டனர். இது அட்டகாசமான மாஸ் ஆக்‌ஷன் படம். துருவ் சர்ஜா, ஷில்பா ஷெட்டி நன்றாக நடித்துள்ளனர். அனைத்து ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும்’ என்றார்.

ஷில்பா ஷெட்டி பேசும்போது, ‘நான் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்றேன். சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழ்நாட்டையும், இங்குள்ள மக்களையும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் ‘மேக்கரீனா’ என்ற பாடலுக்கு ஆடினேன். பிறகு பிரபுதேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தபோது தமிழில் பேச கற்றுக்கொண்டேன்.

இங்கு எனக்கு பரோட்டா, இட்லி, சாம்பார் மிகவும் பிடிக்கும். தமிழில் நிறைய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். ‘கேடி’ படத்தில் சூப்பரான எமோஷன் இருக்கிறது. சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பரான இயக்குனர் இருக்கின்றனர். அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்’ என்றார். துருவ் சர்ஜா பேசுகையில், ‘1970ல் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளோம்’ என்றார்.