Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாரா விமர்சனம்

சிவில் என்ஜினீயர் சாரா என்கிற சாக்‌ஷி அகர்வால், தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஷ்வாவை காதலிக்கிறார். இதற்கிடையே சாக்‌ஷி அகர்வாலை ஒரு தலையாக காதலிக்கும் செல்லக்குட்டி அவரை கடத்துகிறார். இதன் விபரீதமே மீதி கதை.  கவர்ச்சி, சென்டிமெண்ட், பயம், ரொமான்ஸ் என்று நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சாக்‌ஷி அகர்வால், ஓவர் மேக்கப்பில் வருவதை குறைத்திருக்கலாம். அவரது ஜோடி விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு எஸ் ஆகிறார்.

வில்லனாக வரும் ஸ்டண்ட் மாஸ்டர் ‘மிரட்டல்’ செல்வா, வசனம் பேசுவதோடு சரி. இப்படத்தின் இயக்குனர் செல்லக்குட்டி, சாக்‌ஷி அகர்வாலை கடத்திய பிறகு வெறியாட்டம் ஆடுகிறார். அது சில இடங்களில் ஓவர்டோஸாக இருக்கிறது. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. பொன்வண்ணன், அஸ்மிதா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெ.லக்‌ஷ்மன் குமார் ஒளிப்பதிவும், கார்த்திக்ராஜா பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவியுள்ளன. தாய்ப்பாசத்துக்காக மகன் எந்த எல்லையையும் மீறுவான் என்ற சொல்ல வந்த இயக்குனர் செல்லக்குட்டி, அதில் பாதி கிணறு தாண்டியிருக்கிறார். நாடக பாணியில் முழு படத்தையும் நகர்த்தியிருப்பது நெருடுகிறது.