Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேங்ஸ்டர் கதையில் அறிமுகமாகும் சாரா ஆச்சர்

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து கலந்த சண்டைக் காட்சிகள் இடம்பெறும். ஆனால், ‘தாவுத்’ படத்தில் இது எதுவுமே இடம்பெறாது. ஆனால், கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. டர்ம் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார். ‘பரோல்’, ‘உடன்பால்’, ‘பெண் குயின்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்திருந்த லிங்கா ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக சாரா ஆச்சர் அறிமுகமாகிறார்.

‘வத்திக்குச்சி’ திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் நடித்துள்ளனர். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அருண் பாரதி பாடல்கள் எழுத, ராக்கேஷ் அம்பிகாபதி இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரசாந்த் ராமன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘புது டைப் காமெடி கலந்த ஃபேமிலி பேக்கேஜாக படத்தை உருவாக்கியுள்ளேன். இது ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரக்கூடிய கேங்ஸ்டர் படமாக இருக்கும்’ என்றார்.