Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செல்வராகவன் படத்தில் சரஸ்வதி மேனன்

சென்னை: கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷிணி ஹரிப்பிரியன் நடித்து வெளியான ‘மெட்ராஸ் மேட்னி’ என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் மொமண்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்து இருந்தது. இதை தொடர்ந்து செல்வராகவன், யோகி பாபு, ஜே.டி.சக்ரவர்த்தி, ஷைன் டாம் சாக்கோ, சுனில், ராதாரவி, சரஸ்வதி மேனன், வினோதினி வைத்தியநாதன் நடித்த படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

புதியவர் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ‘மோ’, ‘மாயோன்’ ஆகிய படங்களை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்

தயாரித்த ஜி.ஏ.ஹரிகிருஷ்ணனின் நிறுவனம், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்சுக்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்தது. இதையடுத்து தனது 4வது படத்தை உருவாக்கியுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் தியேட்டரில் வெளியாகிறது.