Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என்னை கிண்டல் செய்ய பணம் கொடுக்கிறார்கள்: ராஷ்மிகா பரபரப்பு புகார்

மும்பை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்குபவராகவும் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவரது ரசிகர்கள் ‘நேஷனல் கிரஷ்’ என்று புகழ்கின்றனர். எந்த அளவுக்கு ரசிகர்களிடையே அவருக்கு ஈர்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு கடுமையான கேலி, கிண்டல்களையும் அவர் சந்தித்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பரபரப்பு பேட்டி வருமாறு:

நான் மிகவும் எமோஷனலான ஒரு பெண். ஆனால், நான் பணியாற்றும் துறையை வைத்து, அதை நான் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி நான் செய்தால், ‘ராஷ்மிகா கேமரா முன்னால் இருப்பதற்காகவே இப்படி செய்கிறார்’ என்று சொல்கின்றனர். எனக்கு எதிராக ட்ரோல் செய்வதற்கு அதிக பணம் கொடுக்கப்படுகிறது. திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்.

இது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. என்மீது அன்பு செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள், அதுவே எனக்கு போதும். நான் எப்போதுமே மிகவும் உண்மையானவளாக இருப்பேன். ஆனால், எல்லா நேரத்திலும் அதையே  என்னால் வெளிப்படுத்த முடியாது. காரணம், இங்கு நான் அதிக அன்பு செலுத்தினால், போலியாக இருப்பது போல் பலர் நினைக்கின்றனர்.