Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீரா ஜாஸ்மின் பற்றிய ரகசியம் கசிந்தது

மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன், ‘பிரேமலு’ சங்கீத் பிரதாப், ‘பூவே உனக்காக’ சங்கீதா நடித்துள்ள படம் ‘ஹிருதயபூர்வம்’. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் மீரா ஜாஸ்மின் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனரும், நடிகருமான பஷில் ஜோசப்பும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ரகசியம் வெளியே கசிந்தது எப்படி என்றால், சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டபோது, அதனுடன் இணைக்கப்பட்ட படம் குறித்த நடிகர், நடிகைகள் பட்டியலில் அவர்கள் இருவரது பெயரும் சிறப்புத்தோற்றம் என்று குறிப்பிடப்பட்டது தெரியவந்தது. இதற்கு முன்பு சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘ரசதந்த்ரம்’, ‘இன்னாதே சிந்த விஷயம்’ ஆகிய படங்களில் மோகன்லாலுடன் சேர்ந்து மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் அவர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.