Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மர்லின் மன்றோ நினைவிடத்தில் சீனு ராமசாமி

உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற மர்லின் மன்றோ, கடந்த 1926 ஜூன் 1ம் தேதி பிறந்தார். 1962 ஆகஸ்ட் 5ம் தேதி மரணம் அடைந்தார். அமெரிக்க நடிகையும், பாடகியும், இயக்குனருமான அவர், 1950களில் மிகச்சிறந்த நடிகையாக இருந்தார். இறந்த பிறகும் கூட பிரபலமான ஒரு கலாசாரத்தின் சின்னமாக கருதப்படுகிறார். மர்லின் மன்றோவின் நினைவிடம் என்பது, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், வெஸ்ட்வுட் வில்லேஜ் மெமோரியல் பூங்காவிலுள்ள கிரிப்ட் ஆகும். இது மிகவும் பிரபலமான, அதிகமான ரசிகர்களால் பார்வையிடப்படும் கல்லறை தளமாகும்.

முதலில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த இந்த கல்லறை, மர்லின் மன்றோ அங்கு அடக்கம் செய்யப்பட்ட பிறகு பிரபலங்களின் இறுதி ஓய்விடமாக மாறியது. தமிழில் பல படங்களை இயக்கியவரும், சில படங்களில் நடித்தவரும், கவிஞருமான சீனு ராமசாமி, மறைந்த ஷோபாவின் தீவிர ரசிகர். சென்னை வடபழநியில் ஏ.வி.எம் சுடுகாட்டிலுள்ள ஷோபாவின் நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தனது படப்பிடிப்புக்கு கிளம்புவது சீனு ராமசாமியின் வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த அவர், மர்லின் மன்றோவின் நினைவிடத்துக்கு சென்று வணங்கி மலரஞ்சலி செலுத்தினார். அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.