Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரிந்து வாழும் கமல்ஹாசன், சரிகா: பெற்றோரை நாங்கள் கைவிடவில்லை

மும்பை: கமல்ஹாசன், அவரது முன்னாள் மனைவி நடிகை சரிகாவின் 2 மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன். பெற்றோர் விவாகரத்து மூலம் பிரிந்துவிட்டதை தாங்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது குறித்து அக்‌ஷரா ஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எவ்வளவுதான் நாம் பிரபலங்களின் குழந்தைகள் என்று சொன்னாலும் கூட, கடைசியில் நாமும் ஒரு சாதாரண மனிதர்கள்தான். பெற்றோர் பிரிந்து சென்றதால், நாங்களும் பாதிக்கப்பட்டோம்.

ஆனால் அம்மாவும், அப்பாவும் அதிக அன்பு கொண்டவர்கள். ‘பிரச்னைகள் என்பது எங்கள் இருவருக்கும் இடையே இருக்கிறது. எனவே, இதில் நீங்கள் இருக்க வேண்டாம். எப்போதும் உங்கள் அப்பா, அம்மாவுடன் நீங்கள் இருக்க வேண்டும்’ என்று அப்போது எங்களுக்கு சொல்லப்பட்டது. சில நேரங்களில் இதுபோல் நடந்துவிடும். அதைக்கேட்டதும் என் மனம் கலங்கியது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் இது ஒரு பெரிய பிரச்னைதான். ஆனால் நானும், என் சகோதரி ஸ்ருதிஹாசனும் அதிர்ஷ்டசாலிகள். எங்களின் பெற்றோர் அன்பாகவும், புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தனர். நாங்கள் எங்கள் பெற்றோரை கைவிடவில்லை.