Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஷாருக்கானை டென்ஷனாக்கிய ரசிகர்

பாலிவுட்டில் கடந்த 33 வருடங்களாக ஷாருக்கான் பல படங்களில் நடித்திருந்தாலும், கோலிவுட் டைரக்டர் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ என்ற இந்தி படமே அவருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத்தந்தது. இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அப்போது ஒருவர், ‘உங்களுக்கு வயதாகிவிட்டதே. இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு, எப்போது நீங்கள் ஓய்வெடுப்பீர்கள்?’ என்று கேட்டார். இதனால் டென்ஷனாகி விட்ட ஷாருக்கான், ‘சகோதரரே, உங்கள் கேள்வியில் இருக்கும் குழந்தைத்தனத்தை மாற்றிக்கொண்டு, சற்று முதிர்ச்சியான கேள்வி கேட்க முடிந்தால் கேளுங்கள்.

அதுவரை நீங்கள் ஓய்வுபெறுவதுதான் நல்லது’ என்றார். இன்னொரு ரசிகர், ‘தேசிய விருது வென்ற பிறகு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். அவருக்கு பதிலளித்த ஷாருக்கான், ‘நான் இந்த தேசத்தின் ராஜாவை போல் உணர்கிறேன். இந்த விருது இன்னும் நான் சிறப்பாக செயல்படவும், கடினமாக உழைக்கவும் உத்வேகப்படுத்துகிறது. பொறுப்பும், மரியாதையும் கூடியுள்ளது’ என்றார். மற்றொரு ரசிகர், `உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்ன?’ என்று கேட்டார்.

அவருக்கு பதிலளித்த ஷாருக்கான், `பொழுதுபோக்குவதற்கு நேரம் கிடைக்கவில்லை. எப்போதும் பிசியாக இருக்கிறேன். அடிக்கடி புத்தகம் படிப்பேன் என்றாலும், அடுத்த நாள் படப்பிடிப்பில் பேச வேண்டிய வசனங்களை பேசி ஒத்திகை பார்ப்பேன். நேரம் கிடைத்தால் தூங்குவேன்’ என்றார்.