Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாந்தனு படத்தில் அல்போன்ஸ் புத்ரன்

16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கிறார், சாந்தனு பாக்யராஜ். அப்படத்தின் பெயர், ‘பல்டி’. முக்கிய வேடத்தில் ஷேனு நிகாம் நடிக்கிறார். சோடா பாபு என்ற கேரக்டரில் ‘பிரேமம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நடிக்கிறார். உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். 2007ல் மோகன்லால் நடித்த ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் நடித்திருந்த சாந்தனு, மீண்டும் மல்லுவுட்டுக்கு சென்றது குறித்து கூறுகையில், ‘மீண்டும் மலையாள படவுலகிற்கு திரும்புவது அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது.

விளையாட்டு பின்னணி கொண்ட திரில்லர் படமான இதை எஸ்டிகே பிரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் மலையாளத்தில் அறிமுகமாகிறார். விநாயக் சசிகுமார் பாடல்கள் எழுதுகிறார். அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு செய்ய, ஷெரின் ரேச்சல் சந்தோஷ் இணைந்து தயாரிக்கிறார். சிவகுமார் வி.பணிக்கர் எடிட்டிங் செய்ய, டி.டி.ராமகிருஷ்ணன் கூடுதல் வசனம் எழுதுகிறார். இப்படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.