Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படப்பிடிப்புகளில் பங்கேற்பது எப்போது: ராஷ்மிகா பதில்

சென்னை: திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தனது காலில் சிறிய கட்டு போட்டுள்ள சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த புத்தாண்டு எனக்கு இனிய புத்தாண்டு என்றுதான் நினைக்கிறேன். என்னுடைய புனித இடமான ஜிம்மில் எனக்கு காலில் அடிபட்டு விட்டது. இப்போது நான் ‘ஹாப் மோடில்’ (குதித்து, குதித்து செல்லும் மோட்) இருக்கிறேன். இது அடுத்த சில வாரங்களுக்கா அல்லது மாதங்களுக்கா அல்லது எத்தனை நாட்களுக்கு என்று கடவுளுக்குத்தான் தெரியும்.

இந்தியில் ‘தாமா’, ‘சிக்கந்தர்’ மற்றும் தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் ‘குபேரா’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடக்கும் செட்டுகளுக்கு இப்படி நான் குதித்து, குதித்து செல்ல போகிறேன் என்று நினைக் கிறேன். இந்த தாமதத்துக்காக என் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கால்கள் ஓரளவு சரியானவுடன், குறைந்தபட்சம் குதித்து, குதித்தாவது நடக்கக்கூடிய அளவுக்கு சரியானவுடன் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன். ஒருவேளை உங்களுக்கு இப்போது நான் தேவைப்பட்டால், படப்பிடிப்பு தளத்தின் ஒரு ஓரத்தில் முயல் போன்ற உயர்தர குதிக்கும் ஒர்க்அவுட்டை செய்து கொண்டிருப்பேன். ஹாப்... ஹாப்... ஹாப்.