Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அடல்ட் படங்களில் நடிக்காதீர்கள் தந்தையை கண்டித்த ஸ்ரத்தா கபூர்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், ‘ஸ்திரீ 2’ என்ற படத்தில் நடித்த பிறகு பிஸியாகி விட்டார். இப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஏற்கனவே ‘சாஹோ’ என்ற பான் இந்தியா படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்ததால், தென்னிந்திய படவுலகிலும் ஸ்ரத்தா கபூர் நன்கு பரிச்சயமாகி இருக்கிறார். அவரது தந்தையும், இந்தி நடிகருமான ஷக்தி கபூர், ஒருகாலத்தில் பிஸியான வில்லன் நடிகராக இருந்தார். தற்போது இந்தியில் உருவாகும் சிறுபட்ஜெட் படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி, அடல்ட் கதை கொண்ட படங்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று, ஷக்தி கபூரை ஸ்ரத்தா கபூர் கண்டித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரத்தா கபூர் கூறுகை யில், ‘திரைத்துறையில் எனக்கு இருக்கும் நல்ல பெயர், நீங்கள் நடிக்கும் அடல்ட் படங்களின் மூலம் கெட்டுவிட்டது. அப்படங்களை பார்த்த எனது நண்பர்கள் பலர் என்னை கிண்டல் செய்வதால், தயவுகூர்ந்து இனி அதுபோன்ற படங்களில் நடிக்காமல், நமது வீட்டில் அமைதியாக ஓய்வு

எடுங்கள்’ என்று தந்தைக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ஆனால், தனது மகளின் பேச்சை ஷக்தி கபூர் கேட்பதில்லை என்று, அவர்களுக்கு நெருக்கமான சிலர் சொல்லி வருத்தப்படுகின்றனர்.