Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்ருதிஹாசன் எக்ஸ் தளம் திடீர் முடக்கம்

ஸ்ருதிஹாசன் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக, அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதோடு, தனது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனது எக்ஸ் தள பக்கம் திடீரென்று முடக்கம் செய்யப்பட்டுள்ளதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது அதில் போஸ்ட் செய்யப்பட்டு வரும் பதிவுகளை நான் பதிவிடவில்லை. அந்த பக்கங்களில் இருந்து வரும் மெசேஜ் மற்றும் இதர விஷயங்களுக்கு யாரும் பதிலளிக்காதீர்கள். விரைவில் எனது எக்ஸ் தள அக்கவுண்ட்டை மீட்டெடுப்பேன்’ என்றார்.

தொடர்ந்து பல திரை பிரபலங்களின் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட பக்கங்களை அவர்கள் ஒருசில நாட்களில் திரும்ப பெற்றாலும், இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்பு கார்த்தி, குஷ்பு, காயத்ரி ரகுராம், திரிஷா உள்பட பலரது சோஷியல் மீடியா அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.