சென்னை: 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீபடத்தில் நடித்தவர் ஸ்ருதிகா. அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்தார் ஸ்ருதிகா. நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, திடீரென சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். கடந்த ஓரிரு வருடமாக மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
டிவி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இதற்கிடையே, ஸ்ருதிகா அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் பெட்டில் படுத்திருக்கும் ஸ்ருதிகா, தனக்கு என்ன பிரச்னை என்பதை கூறவில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.
