Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கயாடு லோஹர், சந்தானம் ஆகியோருடன் இணைந்து கல்லூரி மாணவனாக நடிக்கும் சிம்பு

சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சிம்பு நடிக்கும் 49வது படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது. ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிப்பில் ஹிட்டான ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கல்லூரி பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகும் இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். சினிமாவில் சிம்பு மூலம் காமெடி நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர், சந்தானம். தற்போது ஹீரோவாக நடித்தாலும், சிம்புவுக்காக இப்படத்தில் மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சந்தானம் நடித்தார். பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்துக்கு சிம்பு இசை அமைத்திருந்தார்.‘டிராகன்’ என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கயாடு ேலாஹர், இதில் சிம்பு ஜோடியாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் விடிவி கணேஷ் நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். சுபேந்தர் பி.எல் அரங்குகள் நிர்மாணிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.