Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி உறுதியானது

சென்னை: சிலம்பரசன் டி.ஆர் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘எஸ்டிஆர் 49’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோவை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிம்புவின் தோற்றம் மற்றும் கதைக்களம் பற்றிய எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக சிம்பு நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்சில் இணைவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.