சென்னை: வெற்றிமாறன் சிம்பு படத்தை இயக்கவுள்ள நிலையில், அவரின் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், வெற்றிமாறன் சிம்புவை வைத்து ‘வடசென்னை’ இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாகவும், இதனால் ‘வடசென்னை’ பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்னை எழுந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து வெற்றிமாறன் கூறியது: சிம்பு நடிக்கும்...
சென்னை: வெற்றிமாறன் சிம்பு படத்தை இயக்கவுள்ள நிலையில், அவரின் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், வெற்றிமாறன் சிம்புவை வைத்து ‘வடசென்னை’ இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாகவும், இதனால் ‘வடசென்னை’ பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்னை எழுந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து வெற்றிமாறன் கூறியது: சிம்பு நடிக்கும் படம் வடசென்னையை மையப்படுத்தியது என்றாலும், அது ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. அன்புவின் எழுச்சி, தனுஷ் நடிக்கும் படமாகவே ‘வடசென்னை 2’ இருக்கும். ஆனால் ‘வடசென்னை’ படத்தின் கேரக்டர்கள் சிம்புவின் படத்திலும் வரும்.
இரண்டு கதைகளும் ஒரே காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை என்பதால் சிம்பு நடிக்கும் படத்தில் வடசென்னை கேரக்டர்கள் இடம்பெறும். அதே சமயம், அது வேறு படம், இது வேறு படம். ‘வாடிவாசல்’ படம் கைவிடப்படவில்லை. அந்த படத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தாமதமாகும். தனுஷுடன் எனக்கு எந்த பிரச்னை இல்லை. சமீபத்தில் எனக்கு நிதி ரீதியாக பிரச்னை வந்தபோது உதவியது தனுஷ்தான். சிம்பு படத்தை இயக்குவதை அவரிடம்தான் முதலில் சொன்னேன். வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.