கடந்த மே 1ம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அப்போது பேசிய நடிகை சிம்ரன், ‘‘நான் சினிமாவுக்கு...
கடந்த மே 1ம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அப்போது பேசிய நடிகை சிம்ரன், ‘‘நான் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நடிப்பு, டான்ஸ், உடலை தக்க வைப்பது சாதாரணமான விஷயமல்ல. ‘குட் பேட் அக்லி’, ‘அந்தகன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற வெற்றிப்படங்களில் நான் இருப்பது மகிழ்ச்சி. நான் ஹீரோயினாக நடித்த படங்கள் மட்டுமன்றி வில்லியாக நடித்த ‘நட்புக்காக’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ தொடங்கி ‘அந்தகன்’ வரை அனைத்தையும் ரசிகர்கள் ரசித்தனர். இப்போது நாம் செல்போனில் மூழ்கிவிட்டோம்.
குடும்பத்துக்கு நேரம் செலவழியுங்கள். குடும்ப உறவுகளை மதியுங்கள், அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்ற கருத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் சொல்கிறது. இப்படம் 100 நாட்களை கடந்தது மகிழ்ச்சி. எனக்கும் தேசிய விருது வாங்கும் ஆசை இருக்கிறது. அது விரைவில் நடக்கலாம். ‘ஜோடி’ படத்தில் என்னுடன் திரையுலக பயணத்தை தொடங்கியவர் திரிஷா. அவர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை பாராட்டியது மகிழ்ச்சி. திரிஷா இப்போது விஜய், அஜித், மணிரத்னம் படங்களில் நடித்து வருகிறார். எனக்கு ரோல் மாடல் ஸ்ரீதேவி மற்றும் என் அம்மா. விஜய் இப்போது அரசியலுக்கு செல்கிறார்.
அஜித் கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார். இரண்டு பேருக்கும் வாழ்த்துகள். ‘பேட்ட’ படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்தேன். செட்டில் ஓரமாக அமர்ந்து அவர் செயல்பாடுகளை ரசிப்பேன். எவ்வளவு எளிமையான, நல்ல மனிதர். ‘கூலி’ படக்குழுவுக்கு வாழ்த்துகள், அந்த படத்தை நான் சென்னையில் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன்’’ என்றார்.