Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருமண விழாவுக்கு ஜோடியாக வந்த பாடகி கெனிஷா ரவி மோகன்

சென்னை: திருமண விழாவுக்கு பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக வந்தார். ரவி மோகன், மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டார். இவர்களுக்கு இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோவாவை சேர்ந்த பாப் பாடகி கெனிஷாவை ரவி மோகன் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீதா, லஷ்வின் குமார் திருமணம் நேற்று காலை நடந்தது. இதில் பங்கேற்க ரவி மோகன், கெனிஷாவுடன் ஒரே காரில் வந்தார்.

இருவரும் ஒரே நிறத்தில் பட்டு உடைகளை அணிந்திருந்தனர். இருவரும் சேர்ந்து அங்குள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு போட்டோவுக்கு போஸ் தந்தனர். பிறகு திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொண்டனர். கெனிஷாவுடன் சேர்ந்து ஆன்மிக மையம் ஒன்றை திறக்கப்போவதாக ஏற்கனவே ரவி மோகன் தெரிவித்திருந்தார். அதனாலேயே அவர்கள் நட்புடன் பழகி வருவதாக சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலர் கூறினர். ஆனால் அவர்கள் காதலிப்பது உண்மைதான் என்பதுபோல் நேற்றைய சம்பவம் இருந்ததாக பேசப்படுகிறது.