மும்பை: ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்களால் கூறப்படும் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. என்னை விட 16 வயது குறைந்தவள்....
மும்பை: ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்களால் கூறப்படும் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. என்னை விட 16 வயது குறைந்தவள். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவள் செய்யும் குறும்புத்தனத்தை மிகவும் ரசிப்பேன். தற்போது நான் அதிக படங்களில் பிசியாக இருப்பதால், என்னால் அவளை பார்த்து ஆசையாக பேசக்கூட முடியவில்லை. 8 வருடங்களாக அவளை என்னால் பார்க்க முடியவில்லை. ஓய்வு எடுத்துக்கொண்டு அவளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், ஒப்புக்கொண்ட பணிகள் முன்வந்து நிற்பதால், எதற்குமே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று வருத்தப்பட்டுள்ளார்.