Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர்!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தப்படத்தின் டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தன் சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார்.

முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன் ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக, அருண் விஜய்யின் இரண்டு விதமான லுக்கை காட்டும், இந்த டீசர் படம் பற்றிய ஆவலைத்தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி ரசிகர்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.