Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மமிதா பைஜு படத்தில் சிவகார்த்திகேயன்

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், சிவகார்த்திகேயன். அவரது ஜோடியாக, ‘ஏஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்த கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஜோடி சேர்ந்த ‘டியூட்’ என்ற படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் தகவல், இணையதளங்களில் வைரலாகியுள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள இப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. பிரதீப் ரங்கநாதனும், சிவகார்த்திகேயனும் பைக்கில் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதன்மூலம் ‘டியூட்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. முழுநீள காமெடி படமான இதில், முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.