Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவகார்த்திகேயனின் திடீர் ஆசை

பொதுவாக தன் சம்பந்தப்பட்ட படம் ரிலீசாகும்போது பேட்டி அளிக்கும் வழக்கம் கொண்ட சிவகார்த்திகேயன், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். அப்போது ஒருவர், ‘உங்களது படங்களில் எந்தப் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகத்தில் நடிக்க மிகவும் பயமாக இருக்கிறது. காரணம், முதல் பாகத்ைத விட 2வது பாகத்தின் கதை எதிர்பாராததாகவும், அதைவிட சிறப்பாகவும் இருக்க வேண்டும். முதல் பாகம் பெற்றிருந்த வெற்றியை எந்தவிதத்திலும் 2வது பாகம் பாதிக்கக்கூடாது.

ஆனால், ‘மாவீரன்’ படத்தின் 2வது பாகத்தில் நடிக்க நான் ஆசைப்படுகிறேன். காரணம், அந்த கதை மிகவும் தனித்துவமானது. எனவே, இப்படத்தின் 2வது பாகத்துக்கு முயற்சி செய்யலாம்’ என்றார். மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, மிஷ்கின், அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த 2023 ஜூலை 14ம் தேதி திரைக்கு வந்த படம், ‘மாவீரன்’. அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முன்னதாக யோகி பாபு நடிப்பில் ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஷ்வின், தற்போது விக்ரம் நடிக்கும் 63வது படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார்.