Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் இளவரசு, எழுத்தாளர் பவா செல்லதுரை, எஸ். எஸ்.சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும், திமுக தலைமை நிலைய செயலாளர், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ், நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினரும் மூத்த நடிகையுமான சச்சு, லதா உள்பட திரளான அரசியல், திரை பிரபலங்கள் கலந்துகொண்டு கலைமாமணி சிவசூரியன் திருவுருவப் படத்துக்கு மரியாதை செய்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவசூரியன் பேரனும் வழக்கறிஞருமான சிவசூரியன் முருகன் செய்திருந்தார்.