சென்னை: ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தற்போது அதிரடியான மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த எஸ்கே 24 படத்தில் ரஷ்மிகா தான் நாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்மிகா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. ரஷ்மிகாவிற்கு சமீபத்தில் தான் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண நிச்சயம் நடைபெற்றது.
மேலும் அடுத்தாண்டு பிப்ரவரியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதையடுத்து திருமண வேலைகள் இருப்பதன் காரணமாக தான் ரஷ்மிகா இப்படத்திலிருந்து வெளியேறி இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அவருக்கு பதிலாக ஸ்ரீலீலா இப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது. விரைவிலே இது தொடர்பாக அறிவிப்பு வரும். சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் ஸ்ரீலீலா நடித்தாலும் அவர் அதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அந்த படத்தில் ஜோடியில்லை என கூறப்படுகிறது.