ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ’எங்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ராஷ்மிகா மிகவும் பிசியாக இருந்தார். ஒருபுறம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற படப்பிடிப்பில் இருந்தார். மறுபுறம் எங்கள் படத்துக்கு நேரம் ஒதுக்கினார்.
அந்த படத்தின் ஷூட்டிங்கில் அதிகாலை 2 மணி வரை நடித்துவிட்டு, காலை 7 மணிக்கு எங்கள் படத்தின் ஷூட்டிங்கிற்கு வருவார். மூன்று மாதங்கள் அவர் நிம்மதியாக தூங்கவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு காலையில் படப்பிடிப்புக்கு வருவார். வேறு யாராலும் இவ்வளவு ஆதரவை வழங்கியிருக்க முடியாது. ராஷ்மிகா இல்லையென்றால் ’தி கேர்ள் பிரண்ட்’ படமே உருவாகி இருக்காது’ என்றார்.
