Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல்!

நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.

பூஜா ஹெக்டே நடிக்கும் படங்களில் அவரின் நடன திறமைக்கு முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ஒரு பாடலாவது அமைந்து விடும் .குறிப்பாக தமிழில் அவர் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய வைரலானது.

இந்த வருடம் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் சிறப்பான வருடம் என்றே சொல்லலாம் .ஏனெனில், சூர்யா உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளியான ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற 'கனிமா' என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் கூட பட்டையை கிளப்பியது .குறிப்பாக கனிமா பாடலில் பூஜா ஹெக்டேவின் நளினம் ரசிகர்களை ஈர்த்தது. தற்போது இப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன்பு கூலி படத்திலிருந்து வெளியான 'மோனிகா' எனும் பாடலில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்த பாடலால் சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே தான் டிரென்டிங் .இந்த பாடலில் பூஜா ஹெக்டேவின் தோற்றம், நளினம், உடை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வைரலாக தொடங்கியது. தற்போது வரை இப்பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததுள்ளது.இது தமிழ் பாடல் போலவே, தெலுங்கிலும் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.