லாஸ்ஏஞ்சல்ஸ்: பாடல் சிடிக்களை விற்று வந்தவர், இன்று உலகின் பணக்கார இசையமைப்பாளராக இருக்கிறார்.ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகரான ஜெ இசட் (Jay-Z)தான் உலகின் பணக்கார இசையமைப்பாளர். இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 2.5 பில்லியன் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம் கோடி. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசையிலிருந்து...
லாஸ்ஏஞ்சல்ஸ்: பாடல் சிடிக்களை விற்று வந்தவர், இன்று உலகின் பணக்கார இசையமைப்பாளராக இருக்கிறார்.ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகரான ஜெ இசட் (Jay-Z)தான் உலகின் பணக்கார இசையமைப்பாளர். இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 2.5 பில்லியன் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம் கோடி. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசையிலிருந்து இவருக்கு வெறும் 3 சதவீத வருமானம் மட்டுமே கிடைக்கிறது.
மீதி 97 சதவீத வருமானம் அவர் நடத்தி வரும் பல்வேறு தொழில்களின் மூலம் கிடைப்பதாக கூறப்படுகிறது. 25 கிராமி விருதுகளை வென்றவர் ஜெ இசட். இவரது வாழ்க்கை பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடக்கத்தில் பிளாட்பாரத்தில் பாடல் சிடி-க்களை விற்று வந்தார். அடுத்து படிப்படியாக முன்னேறினார். இசைத்துறையில் தனது பெயரை நிலைநாட்ட பல்வேறு அவமானங்களை எதிர்கொண்டுள்ளார்.
1990-களில் பிரதான இசை நிறுவனம் இவரது ஆல்பத்தை நிராகரித்து. 1995-ல் தனது நண்பர்களுடன் இணைந்து புதிய இசை நிறுவனத்தை தொடங்கினார். 1996-ல் இவரது முதல் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1999-ம் ஆண்டில் ஃபேஷன் துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் பிராண்டட் துணிகளுக்கான நிறுவனத்தை தொடங்கினார். அதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பிறகு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். அனைத்திலும் வெற்றி பெற்று சாதித்திருக்கிறார்.