Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என் மகனுக்கு ஆக்‌ஷன் படங்கள்தான் பிடிக்கும்: விஜய் சேதுபதி

ஐதராபாத்: ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘பீனிக்ஸ்; வீழான்’ என்ற தமிழ் படம், கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. தற்போது அப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து நாளை திரைக்கு கொண்டு வருகின்றனர். இதை முன்னிட்டு நடந்த பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது:  இந்தியில் நான் ‘ஜவான்’ படத்தில் நடிக்கும்போது அனல் அரசுவை சந்தித்தேன்.

அப்போது அவர் ஒரு கதை சொல்லி, அதில் என் மகன் சூர்யா நடிக்க வேண்டும் என்றார். உடனே நான், இது சம்பந்தமாக நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு நான் கதைக்குள் வரவில்லை. இப்போது படத்தை பார்த்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது என் மகனுக்கு மிகச்சிறந்த ஒரு தொடக்கம். சின்ன வயதில் இருந்தே அதிரடி ஆக்‌ஷன் என்றால், அதுவும் மாஸ் சினிமா என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் எப்போது என்னிடம் பேசினாலும், ‘இன்னும் நீங்கள் அதிகமான மாஸ் படங்களில் நடிக்க வேண்டும்’ என்று சொல்வான்.

ஆக்‌ஷன் படங்களின் மீது சூர்யாவுக்கு இருக்கும் ஈடுபாடு, ‘பீனிக்ஸ்’ படத்தில் அவன் ஏற்றிருக்கும் கேரக்டரின் மூலம் தெரிகிறது. அவனது கனவை நிஜமாக்கிய அனல் அரசுவுக்கும், தயாரிப்பாளர் ராஜலட்சுமிக்கும் நன்றி. இப்போது நான் புரி ஜெகன்னாத் இயக்கும் பன்மொழி படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் தெலுங்கில் சரளமாக பேச கற்றுக்கொள்வேன்.