Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாடலாசிரியரான இன்ஜினியர்

சென்னை: இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வானரன்’ படத்தின் முழு பாடல்களையும் எழுதி கவனம் ஈர்த்துள்ளார் பாடலாசிரியர் செந்தமிழ்.

தந்தை, மகள் உறவு குறித்தான “நீதானே என் உலகம்”பாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிஞர் செந்தமிழ், பொறியியல் பட்ட தாரியான இவரின் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டம் குறித்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடல் கானா பாலா பாடி பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து கிராமிய பாடகர் வேல்முருகன் பாடிய உதவி இயக்குநர்களின் வலியை பேசும் பாடல் என பல்வேறு ஆல்பம் பாடல்கள் மற்றும் கிஷோர் நடிப்பில் இயக்குநர் ராம் ஜி.வியின் சிவப்பு சேவல் படத்திலும் சாம் சி.எஸ். இசையில் பாடல்களை எழுதியுள்ளார். ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ படத்திலும் சில பாடல்கள் எழுதியுள்ளார். இப்போது அக்காமார்களின் சிறப்பு பேசும் கவிதை தொகுப்பு, செந்தமிழ் ஹய்கூ, இரண்டு வரி டுவிட்டு தொகுப்பு என நான்கு கவிதைத் தொகுதிகளை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.