Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூப்பா (ஆங்கிலம்)

soopa

கோடை விடுமுறையை குறிவைத்து குழந்தைகளுக்கான படமான ‘சூப்பா’வை வெளியிட்டிருக்கிறது நெட்பிளிக்ஸ். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் அபூர்வ உயிரினமான ‘சூப்பா’ தற்போதும் வாழ்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். பூனை போன்ற தோற்றம் கொண்ட அது பறக்கும் சக்தி கொண்டது.

அதன் ரத்தத்தில் இருக்கும் அபூர்வ சக்தியை கொண்டு ஆயுளை நீட்டிக்கலாம் என்றும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் அதனை தேடி ஒரு சமூக விரோத கும்பல் ஆராய்ச்சி என்ற பெயரில் அலைகிறது. சூப்பாவின் தாய் மற்றும் குட்டியை கண்டுபிடிக்கும் கும்பல் அதனை பிடிக்க துரத்துகிறது. இதில் குட்டி, படத்தின் நாயகன் சிறுவன் யவன் வொயிட்டனிடம் வந்து சேர்கிறது.

விடுமுறை காலத்தை கழிக்க மெக்சிகோவில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்திருக்கும் அவன் முன்னாள் ரஸ்லிங் வீரரான தனது தாத்தா டெமின் பிச்சயருடன் இணைந்து குட்டியை தாயுடன் எப்படி சேர்க்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கதையை படிக்கும்போதே சுவாரஸ்யமாக இருக்கும்.

பெரிய அளவில் கிராபிக்ஸ் பிரமாண்டம், ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையான படத்தை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜோனஸ் கோர்ச். வில்லனாக மைக்கேல் பர்மதானும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதே கதையம்சத்துடன் இதற்கு முன் வெளிவந்த பல படங்களின் காட்சிகள் அப்படியே இதிலும் இடம்பெற்றிருந்தாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. கொஞ்சம் லாஜிக் மிஸ்சாகும் படம் என்றாலும், பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறது படம். குழந்தைகளோடு பார்க்கத் தகுந்த படம்.