Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கியாரா அத்வானி வீட்டில் விசேஷம்

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்‌ஷி தோனி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்’, `ஷேர்ஷா’ போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான `ஷேர்ஷா’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த கியாரா அத்வானி, அவரை மிகவும் தீவிரமாக காதலித்து, கடந்த 2023ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த கியாரா அத்வானி, கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து நடிப்பில் இருந்து ஓய்வெடுத்தார். இந்நிலையில், மும்பையில் கியாரா அத்வானிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை தங்களின் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்து காணப்படுகிறது. எங்களின் உலகம் என்றென்றும் மாறாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.