முன்னணி நடிகையாக வருவார் என்று பார்த்தால், கடைநிலை நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் ராசி கன்னா. பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், சில படங்களில் சொந்தக்குரலில் பாடியிருந்தார். அழகாகவும் இருக்கிறார், படுகவர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அந்த வருத்தம் முகத்தில் தெரிந்தாலும், அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள விரும்பாத ராசி கன்னா, சோஷியல் மீடியாவில் வழக்கம்போல் தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவருக்கு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் பவன் கல்யாண், தேர்தலுக்கு முன்பு ‘ஹரி ஹர வீர மல்லு’, ‘ஓஜி’, ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்களில் நடித்தார். தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு அவரால் சினிமா படப்பிடிப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்நிலையில், திடீரென்று ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து முடித்தார். அப்படியே ‘ஓஜி’ படத்திலும் நடித்துவிட்டார். கடந்த சில வாரங்களாக ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், தற்போது மற்றொரு ஹீரோயினாக ராசி கன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஸ்ரீலீலா புலம்ப ஆரம்பித்துள்ளார்.