Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா

தனது தனித்துவமான நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர், ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பான் இந்தியா படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ என்ற பாடல் காட்சியில், ஹீரோ அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஆடியிருந்தார். தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி நடிக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா, இந்தியில் ‘ஆஷிக் 3’, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’, ‘ஜூனியர்’, ‘லெனின்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க ஒன்றரை கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அவர், சமீபத்தில் தனது 24வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை அவர் தீவிரமாக காதலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தரப்பில் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றாலும், நட்சத்திரப்படி தனது பிறந்தநாளை கொண்டாடியபோது எடுத்த போட்டோக்களை வைத்து, விரைவில் அவர் காதல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிவேகமாக தகவல் பரவியது. ஆனால், சில நாட்களிலேயே அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உண்ைமயை போட்டு உடைத்துவிட்டார் ஸ்ரீலீலா. என்றாலும், கார்த்திக் ஆர்யனுடன் அவரை இணைத்து வெளியாகும் தகவல்கள் நின்றபாடில்லை.