‘கயல்’ வின்சென்ட், டிஜே பானு இணைந்து நடிக்கும் ‘அந்தோனி’ என்ற படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இலங்கை யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஓசை பிலிம்ஸ் சார்பில் கலைவளரி சக ரமணா, சுகந்தினி ரமணதாஸ் தயாரித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து...
‘கயல்’ வின்சென்ட், டிஜே பானு இணைந்து நடிக்கும் ‘அந்தோனி’ என்ற படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இலங்கை யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஓசை பிலிம்ஸ் சார்பில் கலைவளரி சக ரமணா, சுகந்தினி ரமணதாஸ் தயாரித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர். இரமணன் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
விஜய் பிலிம்ஸ் விஜயன் பாலசிங்கம், ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் சிறீஸ்கந்தராஜா இணை தயாரிப்பு செய்துள்ளனர். முக்கிய வேடங்களில் அருள்தாஸ், நிழல்கள் ரவி, இலங்கை சுதர்சன் ரவீந்திரன், சவுமி, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்தசீலன் நடித்துள்ளனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, கலா மோகன் அரங்கம் அமைக்க, சுரேஷ் ஏ.பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இலங்கையின் மண் சார்ந்த உணர்வுகளை எடுத்துச் சொல்லும் படமாக ‘அந்தோனி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.