Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி

மாடலிங் துறையில் தனது கலைத்துறை பயணத்தை தொடங்கியவர், ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2018ம் ஆண்டு கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பான் இந்தியா அளவில் பிரபலமான அவர், தமிழில் கடந்த 2022ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ என்ற தெலுங்கு படத்தில் நானி ஜோடியாக நடித்தார். தற்போது ‘தெலுசு காதா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இதுவரை அவர் நடித்த படங்கள் அனைத்தும் விறுவிறுப்புடன் வன்முறை மற்றும் ரத்தத்தால் நிரம்பியிருந்தது.

தற்போது முதல்முறையாக அப்படி எதுவும் இல்லாமல், நகைச்சுவை படத்தில் நடிக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில் சித்தார்த் ஜொன்னலகட்டா ஹீரோவாக நடிக்கிறார். நீரஜா கோனா இயக்கிய இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஸ்டண்ட் மற்றும் ரத்தம் இல்லாமல் ஒரு படத்தில் நடித்துள்ளதாக சொன்னார்.