Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நட்சத்திர அந்தஸ்து சமந்தா புது தத்துவம்

சமீபத்தில் நடந்த அகில இந்திய மேலாண்மை சங்க மாநாட்டில் பங்கேற்ற சமந்தா பேசுகையில், ‘திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும்போது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றாலும், குறுகிய காலமே காத்திருப்பில் இருக்க முடியும். ஒரு நடிகராக உங்களது காத்திருப்பு காலம் என்பது மிகவும் குறைவு என்று நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரங்கள் ஒரு மயக்கத்தை அளிக்கலாம்.

ஒரு கணம் அது எல்லாமே நீங்கள்தான் என்று கூட நினைக்கலாம். ஆனால், அது உண்மை இல்லை. நட்சத்திரமாக இருக்கும்போது நிறைய நிறைவுகளும், நன்மைகளும் கிடைக்கும். ஆனால், அது உங்கள் சொந்த முயற்சியால் வந்தது மட்டுமே அல்ல. எனவே, நான் ஒரு நடிகையாக எனது சொந்த வாழ்க்கையை விட ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க நினைத்தேன். மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியான எனது படங்களின் முடிவால் மகிழ்ச்சி சிதைக்கப்பட்டு விட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக எனது படங்கள் வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

100 பிரச்னைகள் இருப்பதாக பலர் நினைக்கும்போது, உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்கு மிகப்பெரிய பிரச்னையாக தெரியும். எனது பிரச்னைகளின் மூலம் பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது முக்கியம் இல்லை. அந்த விளையாட்டை நாம் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.