Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசு கவுரவம்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வில்லன் வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பலமுறை சைமா விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது கேரள மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் விருதை வென்றுள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.