தற்போது ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், பிரபாஸ். இந்நிலையில், தெலுங்கு படவுலகில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடந்து வருவதால், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கின்றன. இப்பிரச்னையால் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ், திரிப்தி டிம்ரி நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற...
தற்போது ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், பிரபாஸ். இந்நிலையில், தெலுங்கு படவுலகில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடந்து வருவதால், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கின்றன. இப்பிரச்னையால் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ், திரிப்தி டிம்ரி நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்கி முழுவீச்சில் நடக்கும் என்று இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், ‘தி ராஜா சாப்’ படத்துக்கு இன்னும் சில பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகளில் பிரபாஸ் நடிக்க வேண்டும். அதை எல்லாம் முடித்துவிட்டு பிரபாஸ் திரும்பினாலும், வரும் அக்டோபர் மாதம் ‘ஸ்பிரிட்’ படத்துக்கான படப்பிடிப்பு நடப்பது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ’ஸ்பிரிட்’ முதற்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ஒருவரை வைத்து தொடங்க திட்டமிட்டார் சந்தீப் ரெட்டி வங்கா. ஆனால், பாலிவுட் நடிகரின் கால்ஷீட் பிரச்னையால், திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘தெலுங்கு விநியோகஸ்தர்கள், வரும் ஜனவரி 9ம் தேதி பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். டிசம்பர் 5ம் தேதி படம் திரைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று இந்தி விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் சில பாடல்கள் மற்றும் சில முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. தற்போது நான்கரை மணி நேர காட்சிகள் இருக்கின்றன. அதை இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கும் பணி நடக்கிறது. இதன் 2வது பாகமும் விரைவில் உருவாகும். ஆனால், அக்கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. மல்டிவர்ஸ் பாணியில் வித்தியாசமான கதை கொண்டதாக இருக்கும்’ என்றார்.