Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓடிடியில் வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, "திரு மாணிக்கம்" திரைப்படம்!

புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல், ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான ஃபேமிலி டிராமா திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, "திரு மாணிக்கம்" திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24 முதல், கன்னடம் மற்றும் மலையாள டப்பிங் பதிப்புகளிலும் கிடைக்கும்.

திரு மாணிக்கம் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் அலையை உருவாக்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இப்படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிடுகையில்... இது மிக "அற்புதமான படைப்பு", இப்படத்தின் ஆழமும், உணர்வுகளும் படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சமுத்திரக்கனி, பாரதிராஜா உட்பட அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். மேலும் ஆர்யா முதல் ஐஏஎஸ் இறையன்பு வரை, பல முன்னணி ஆளுமைகள் பலரும், இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் பாராட்டைப் பெற்ற, திரு மாணிக்கம் படத்தை, ஜனவரி 24 அன்று ஓடிடியில் கண்டுகளியுங்கள்.