Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முகத்தில் அறுவை சிகிச்சை செய்த ராஷ்மிகா: போட்டோவுக்கு ‘போஸ்’ தர மறுப்பு

சென்னை: ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘தாமா’ இந்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகா முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்திருந்தார். அதை கழற்றும்படி அங்கிருந்த போட்டோகிராபர்கள் கேட்க, அவர், ட்ரீட்மென்ட் எடுத்துள்ளேன். அதனால் மாஸ்க் கழற்ற முடியாது என மறுத்துவிட்டார்.

அவர் முகத்துக்கு என்ன ஆனது என ரசிகர்கள் தற்போது கேட்டு வருகின்றனர். இது குறித்து விசாரித்தபோது, முகத்தை மேலும் அழகாக்க ராஷ்மிகா அறுவை சிகிச்சை செய்துள்ளாராம். அதனால்தான் சில நாட்களாக அவர் தனது முகத்தை மறைத்து வருகிறார் என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.