Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரெட்ரோ பட சம்பளத்தில் இருந்து மாணவர்கள் படிப்புக்கு சூர்யா ரூ.10 கோடி நிதியுதவி

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்ேட நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ பட நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சூர்யா கலந்துகொண்டார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பகிர்தலே மிகச்சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக அடையாளம் கொடுத்து, எனது முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய சமூகத்திடம் என் வெற்றியை பகிர்ந்துகொள்வது மனநிறைவு தருகிறது.

‘ரெட்ரோ’ படத்துக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு, மகிழ்ச்சியான வெற்றியை பரிசளித்துள்ளது. எனக்கு கடினமான சூழல் வரும்போது ரசிகர்களின் அன்பும், ஆதரவும் என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி. அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டு, பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ரெட்ரோ’ படத்துக்காக எனக்கு கிடைத்த தொகையில் இருந்து 10 கோடி ரூபாயை இந்த கல்வியாண்டில் அகரம் பவுண்டேஷனுக்கு அளித்துள்ளேன்.