Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரிஸ்க் எடுங்க; சமந்தா அட்வைஸ்

சென்னை: கடந்த 2 ஆண்டுகள் மயோசிடிஸ் என சொல்லப்பம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு, நடிப்புக்கு நீண்ட பிரேக் விட்டிருந்தார் சமந்தா. இது அவரது தொழில் வாழ்க்கையில ஒரு பெரிய சவாலாக இருந்ததாக சொல்கிறார். ஆனால், அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலயும் தைரியமா இருந்து, மீண்டு வந்து, இப்போ மறுபடியும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இது அவர் அவருடைய வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்துள்ளதற்கு ஒரு உதாரணம் என்கிறார்.

இது குறித்து சமந்தா கூறும்போது, ‘‘ரிஸ்க் எடுக்காம எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேறணும்னா கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாது. புதுசா எதையாவது முயற்சி பண்ணனும். பயத்தை விட்டுட்டு தைரியமா சவால்களை எதிர்கொள்ளனும்’’ என சமந்தா தெரிவித்துள்ளார்.