Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகளை வீடியோ எடுப்பதா? தீபிகா ஆவேசம்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை வெளியுலகிற்கு காட்டாமல் வளர்த்து வரும் தீபிகா படுகோன், ஒரு போட்டோ கூட வெளியிடவில்லை. யாரும் தனது குழந்தையை போட்டோ எடுக்கக்கூடாது என்று அவர் கறாராக சொல்லியிருந்தார். அதன்படி இதுவரை யாரும் போட்டோ எடுக்கவில்லை. இந்நிலையில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் தங்கள் மகள் துவாவுடன் மும்பை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது தீபிகா படுகோன் மடியில் அமர்ந்திருந்த மகளின் முகம் தெளிவாக தெரிந்தது. அதை விமான நிலையத்தில் நின்ற ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்தார்.

தனக்கு பின்புறம் இருந்து வீடியோ எடுப்பதை பார்த்து பதறிய தீபிகா படுகோன், உடனே வீடியோ எடுத்த நபரை ஆவேசத்துடன் திட்டி, வீடியோ எடுக்க வேண்டாம் என்று எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அந்த நபர் சோஷியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு வைரலான நிலையில், தீபிகா படுகோனின் அனுமதியின்றி அவரது மகளின் வீடியோவை வெளியிட்டதை நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். வீடியோவை உடனே அகற்றும்படி கேட்டுள்ளனர். அலியா பட், ரன்பீர் கபூர் தம்பதியும் தங்கள் மகள் ராஹாவை யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என்று கறாராக சொல்லி இருந்தனர். பிறகு அலியா பட்டே தனது மகளின் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார்.