Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திறமையாளர்களுக்கான சினிமா தளம் தில் ராஜூ தொடங்குகிறார்

ஐதராபாத்: ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள தில் ராஜூ, அடுத்த தலைமுறை திறமையாளர்களை அறிமுகம் செய்வதற்காக, ‘தில் ராஜூ ட்ரீம்ஸ்’ என்ற புதிய தளத்தை தொடங்கியுள்ளார். வரும் ஜூன் மாதம் முதல் செயல்பட தொடங்கும் இதில், அதிக ஆர்வமுள்ள இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக பதிவிடலாம். 24 கலைகளில் ஏதோ ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் அல்லது சினிமாவுக்கு புதியவராக இருந்தாலும், இந்த தளம் அவரவர் திறமைக்குரிய வாய்ப்புகளை வழங்கும். தடைகளை நீக்கி, பரிந்துரை இல்லாத உண்மையான திறமையாளர்கள் பிரகாசிக்கும் வகையில், இது நியாயமான தளமாக இருக்கும். இந்த தளத்தில் வரக்கூடிய உள்ளீடுகளை நிபுணர் குழு ஆய்வு செய்யும். பிறகுதான் தில் ராஜூ

பட்டியலிடப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளை மதிப்பீடு செய்வார்.