Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேரளா பாடப்புத்தகத்தில் தமிழ் பாடலாசிரியரின் கவிதை

சென்னை: விஜய்ஆண்டனி இசை மற்றும் நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் அருண்பாரதி. அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன், சண்டக்கோழி2, பிச்சைக்காரன் 2, விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர், தற்போது வெளியாகியிருக்கும் மார்கன் திரைப்படத்திலும், சசிக்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் ஃபிரீடம் திரைப்படத்திலும், கதைக்களத்தை எடுத்துச் சொல்லும் பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும் பதினைந்து திரைப்படங்களுக்கும் மேல் பாடல்கள் எழுதி வருகிறார்.

இந்நிலையில் இவரது கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ‘‘இயக்குனர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் கவிஞராக இருக்கவே விருப்பம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சி. கண்ணதாசன் போல் கவித்துவத்துடன் கருத்து சொல்லவே விருப்பம்’’ என்றார் அருண்பாரதி.